பிரதான செய்திகள்

அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம், சுழற்சி முறை சத்தியாக்கிரகம்

வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள மடவளை மதீனா தேசிய பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி பாரிய ஆர்பாட்டம் ஒன்றும் சுழற்சி முறை சத்தியாக்கிரகம் ஒன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

 

பாடசாலை நிர்வாகத்தால் ஊடகங்களுக்கு கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டது.

காலை 8.30 மணி முதல் ஆர்பாட்டம் ஆரம்பமாகியதுடன் கண்டி – வத்துகாமம் பிரதான பாதை இடைகிடைக ஸ்தம்பித்தது. 13139003_970631223005224_1749794562475962241_n

ஆர்ப்பாட்டக் காரர்களுக்குரிய பதிலை தகுதி வாய்ந்த அதிகாரிகள் வழங்கும் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் எனப் பெருமளவு பொது மக்கள் கலந்து கொண்டனர். அதேநேரம் பாடசாலை வழமைபோல் நடை பெற்றது. வத்துகாமம் கல்விக் காரியாலயத்திலிருந்து வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலர் பாடசாலைக்கு சமுகமளித்திருந்த போதும் பேச்சுவார்த்தைகளின் போது அவ் அதிகாரிகளும் பாடசாலை நிர்வாகமும் ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை.62fc52ab-1a77-4128-98dd-434d5a5e713a

மத்திய மாகாண சபை அங்கத்தவர்களான, செய்னுள் ஆப்தீன் லாபிர், ஹிதாயத் சத்தார். எஸ்.கே. சமரநாயக்கா உட்பட இன்னும் சில அரசியல் வாதிகளும் சமுகமளித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பின்வரும் சுலோகங்களை ஏந்தியும் பதாதைகளை ஏந்தியும் இருந்தனர்.13100727_10206460382087697_4015849769476849913_n

அதில் முக்கிய மாக ‘கற்றுக் கொள் கற்றுக் கொள் பேசக் கற்றுக் கொள்..’ ‘அவமதிக்காதே அவமதிக்காதே பெற்றோரை அவமதிக்காதே..’ ‘போராட்டம் போராட்டம் ஹிதாயா போகும்வரை போராட்டம்…’ ‘வெளியேறு வெளியேறு ஹிதாயா வெளியேறு…’,‘ஓடு ஓடு ஹிதாயா வெளியே ஓடு..’, ‘போடாதே போடாதே டபள்கேம் போடாதே…’, ‘கல்விக்குப் பஞ்சம், பாடசாலையில் கைலஞ்சம்…’

Related posts

வடபுல முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படாத வடமாகாண சபை எம்மை அரவணைத்துச் செல்கின்றதென்று எவ்வாறு கூற முடியும்? முசலியில் அமைச்சர் றிசாத் கேள்வி.

wpengine

பொறுமை காத்து உரிமைகளை வென்றெடுப்போம். தம்புள்ளையில் அமைச்சர் றிஷாத்

wpengine

ஐக்கிய மக்கள் சக்தியினர் எவரும் அரசாங்கத்துடன் இணைய ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்!-ரஞ்சித் மத்தும பண்டார-

Editor