செய்திகள்பிரதான செய்திகள்

அதிக விலைக்கு மறைத்து விக்கப்பட இருந்த 4750 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது .

கொழும்பு – 12 பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4,750 கிலோ நிறையுடைய 950 அரிசி மூடைகள் இன்று சனிக்கிழமை (15) கைப்பற்றப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த அரிசி தொகையானது, சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts

கல்முனை பிரதேச மக்களை சந்தித்து கலந்துறையாடிய அமைச்சர் றிஷாட்

wpengine

இன்று மன்னாரில் விசாரணை! முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு போதிய தகவல் இல்லை

wpengine

தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் பழனிச்சாமி

wpengine