செய்திகள்பிரதான செய்திகள்

அதிக விலைக்கு மருந்து விற்பனை. – வைத்தியர் உட்பட இருவர் கைது!!!

அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரின் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் பணியாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் மற்றுமொரு நபருக்கு அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலஞ்சம் பெற்ற தொழிநுட்ப அதிகாரி கைது

wpengine

ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த – சிங்கள நாடு. தமிழர்கள் புரிய வேண்டும்

wpengine

எரிபொருள் ஒதுக்கீடு குறித்தான அரசாங்கத்தின் புதிய முடிவு!

Editor