செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

அதிக போதை பாவனை, சிகிச்சை பலனின்றிஉயிரிழந்த இளைஞன்.

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார் . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ் . போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் (2) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டவர் என கூறப்படுகின்றது.

சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே , அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டது என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதையை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தமிழ்,முஸ்லிம் ஒற்றுமையாக வாழ வேண்டும்! இல்லையென்றால் காவி உடை தரித்தவர் நீதிபதியாக வருவார்கள்

wpengine

வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்து நிலையில் ஆண் ஒருவரின் சடலம்!

Maash

கணவனின் சந்தேகம் இளம் பெண் தற்கொலை முயற்சி

wpengine