பிரதான செய்திகள்

அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் அரம்பிக்கப்பட்டுள்ளன.

பதவியில் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும், அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட சுயதீன ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், குறித்த சுயாதீன ஆணைக்குழு நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல்கலைகழகத்தின் பதிவாளர், பிரதிப் பதிவாளர், விரிவுரையாளர்கள், விடுதிப் பொறுப்பாளர், முன்னாள் பொறியியலாளர், வேலை மேற்பார்வையாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மங்களவின் நினைவு நிகழ்வில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

வடக்கு ஆளுனர் ரேஜிநோல் குரே கொழும்பில் இன்று (31) ஊடக மாநாடு

wpengine

பணியாளர்களின் சம்பளம் பாதிக்கப்பட்டோருக்கு நன்கொடை!

wpengine