பிரதான செய்திகள்

அதிகாரம் தன்னிடம் இருந்திருக்குமாயின்! ஆளும் கட்சியில் பலர் இருந்திருக்க மாட்டார்கள்

மோசடியாளர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் தன்னிடம் இருந்திருக்குமாயின் தற்போது ஆளும் கட்சியில் பலர் இருந்திருக்க மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மோசடியாளர்கள் எவரும் நாடாளுமன்றத்திற்கு வர மாட்டார்கள். வெள்ளை உடை அணிவதால், கொள்ளைகளை மறைக்க முடியாது.


1989ஆம் ஆண்டுகளில் நாங்கள் குற்றங்களை செய்திருந்தால், கடந்த 31 ஆண்டுகளில் எங்களுக்கு தண்டனை வழங்கி இருக்கலாம், நாங்களும் தண்டனை அனுபவிக்க விரும்புகிறோம்.


நாடாளுமன்றத்தில் உள்ள பழைய முகங்கள் கேள்வி எழுப்பினால் அவர்களை பற்றி கூற அவர்களின் பழைய நடவடிக்கைகள் எனக்கு நினைவுக்கு வரும்.


புதிய முகங்கள் பற்றி தெரியாது. புதிய முகங்களை நினைவில் இல்லை. அவர்களை பற்றி ஊரில் தேடி அறிய வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மீதான விவாதம்;ஒருநாள் நீடிக்கும்!

Editor

ஆனமடுவ நோக்கி நவவி விஜயம்! பிரதிப் பொலிஸ் மா அதிபரிடன் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

wpengine

தமிழ் நாட்டில் கொரோனா அதிகரிப்பு நாளை மூடக்கம்-தமிழக அரசு

wpengine