அரசியல்செய்திகள்

அதிகரித்துள்ள கொலைக்கலாசாரம் காரணமாக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் தற்போது அதிகரித்துள்ள கொலைக்கலாசாரம் காரணமாக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். 

அக்மீபன, பூஸ்ஸ படுகொலை, தெல்தென மீகக்ஹீல கொலைச்சம்பவம், அங்குனுகொலெஸ, வெலிவேரிய துப்பாக்கிச்சசூட்டு சம்பவம், மூதூர் இரட்டை கொலை சம்பவம் மற்றும் நேற்று இடம்பெற்ற அம்பலங்கொடை படுகொலை, இன்று இடம்பெற்ற கொழும்பு – கிரான்ட்பாஸ்  இரட்டை கொலை என பல்வேறு குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. 

உண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து பாரியதொரு பிரச்சினை காணப்படுகின்றது. இந்த பாதுகாப்பு பிரச்சினை எமது நாட்டு மக்கள் மீது பெரும் தாக்கத்தை செலுத்துகின்றது. 

அத்துடன், இச்சம்பவங்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலாத்துறை மீதும் தாக்கத்தை செலுத்துகின்றது. 

எனவே, நாட்டில் தற்போது அதிகரித்துள்ள கொலைகலாசாரத்தை இல்லாது செய்வதற்கு சட்டம் ஒழுங்குமுறை ஊடாக நிச்சயமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் நீதிமன்ற கொலை பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்டவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்நிலையில், நாளுக்கு நாள் இடம்பெறுகின்ற இந்த மிலேச்சத்தனமான சம்பவங்கள், கொலைக்கலாசாரங்கள் என்பனவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா? தீர்வுகள் இல்லையா? 

இவற்றுக்கு மத்தியில், எமது மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளார்கள், எனவே, ஜனாதிபதி இது குறித்து கவனம் செலுத்தி தெளிவான தீர்வை வழங்கவும் அதனை நாட்டிற்கு முன்வைக்கவும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சியில் மதுபோதையுடன் தாய், 2வயது குழந்தையின் மரணத்துக்கு காரணமான சாரதி விடுதலை .

Maash

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போலீஸ் பாதுகாவல் வழங்க போலீஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

Maash

முல்லைத்தீவில் முதல் முறையாக இலங்கை தேசிய புதியவர்கள் பிரிவினருக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டி!

Maash