யாழ் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் வசாவிளான் தொடக்கம் மாவட்டபுரம் வரையான ஈழகேசரி பொன்னையா வீதி புனரமைக்கும் பணிகளை குரும்பசிட்டி கிராமத்தில் 07.06.2017 புதன்கிழமை அன்று வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
அதன்போது வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சிவராஜலிங்கம், பிரதம பொறியியலாளர்களான ஜெகானந்தன், அபிராமி மற்றும் வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் சிவபரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.


