உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அணு ஆயுத ஒப்பந்தம்! 60நாற்களில் ஈரானுக்கு பொருளாதார தடை

அணு ஆயுதம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை மீள பெறுவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடையினை கொண்டு வருவது குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார தடையினை மீள அமுல் படுத்துவதா என்பது குறித்து அமெரிக்க கொங்கிரஸ் எதிர்வரும் 60 நாட்களில் தீர்மானிக்கும்.

இந்த விடயம் குறித்து ஐரோப்பிய மற்றும் சீன நாடுகளுடன் ஆலோசனையினை அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் மேற்கொள்ளவுள்ளார்.

ஈரானுடனான உறவினை துண்டிக்கும் படி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் இருந்து அழுத்தங்கள் வந்த வண்ணம் உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையின் படி அணு ஆயுத நடவடிக்கைகளை நிறுத்த ஈரான் சம்மதத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அதற்கு பிரதிபலனாக விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையின் சில பகுதிகளை மீள பெற தீர்மானிக்கப்பட்டது.

Related posts

வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை அதிபரின் கேவலமான செயல்! பலர் கண்டனம்

wpengine

ஹக்கீம் ஹசனலி கண்ணாம்பூச்சி விளையாட்டு (பகுதி-01)

wpengine

அமைச்சர் றிஷாட் இனவாதியா? சிங்கள மக்கள் ஆச்சரியம்

wpengine