உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அணுவில் 200பேரை பழிகொடுத்த வடகொரியா

வடகொரியாவின் அணுவாயுத சோதனைத் தளத்தில் உள்ள சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானிய ஊடகமான அசாஹி என்ற தொலைக்காட்சி இதனைத் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் 6வது அணுவாயுத சோதனையை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 10ம் திகதி இந்த சுரங்கம் இடிந்து வீழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதன்போது குறித்த சுரங்கத்தில் பணியாளர்களாக இருந்த நூற்றுக் கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஜப்பானிய தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ள ரொயிட்டர்ஸ் இணையத்தளம் இது குறித்து உறுதிப்படுத்த முடியாதிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

ஸ்டாலினைப் பார்வையிட சென்ற இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித்

wpengine

ஒலுவிலில் நடந்தது என்ன?

wpengine

உருளைக்கிழங்கு உற்பத்தியாளருக்கு நஷ்டம்! கைகொடுத்து உதவிய அமைச்சர் றிஷாட்

wpengine