உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அணி மாறுவது பற்றி கூற வைகோவிற்குத் தகுதி இல்லை: சாடும் ஜவாஹிருல்லா

அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ”மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துபேச பலமுறை முயன்றும், கடைசி வரை அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலைக்கழித்ததாலேயே, அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலக நேரிட்டது. மேலும், கூட்டணி கட்சித் தலைவர்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதிப்பதில்லை. அடிக்கடி அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற, வைகோவிற்கு எந்தத் தகுதியும் இல்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

Related posts

நீச்சல் உடையில் திருடனை பிடித்த பெண் பொலிஸ்

wpengine

இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

Editor

சிங்கள முஸ்லிம்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயற்சி

wpengine