பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை மக்களுக்கு ஹசனலி தான் பிரச்சினையா?

(Abu Rashath)

 

அட்டாளைச்சேனை மக்கள் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படப் போகிறதென அறிந்தால் மாத்திரமே சாரணை வரிந்து கட்டுகிறார்கள்.தேசியப்பட்டியலானது சல்மானிடமுள்ள ஒவ்வொரு  நாளும் அட்டாளைச்சேனைக்கு உரித்தான தேசியப்பட்டியலின் வாழ்  நாள் குறைந்து கொண்டே வருகிறது.

 

ஏன் இதனை அட்டாளைச்சேனை மக்கள் அறிந்து கொள்ளாமல் உள்ளனர்.தமிழக ஜல்லிக்கட்டுப் புரட்சிக்கு தமிழகமே ஆடிப்போனது போல மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்து அட்டாளைச்சேனை பள்ளிவாயல் களத்திற்கு வந்தால் ஹக்கீம் ஆடிப் போய் விடுவார்.

 

இப்போது ஹசனலி மீது கொண்ட அச்சமும் பறந்துவிட்டது.இன்னுமேன் கால தாமதம்.குட்டக் குட்ட குனிபவன் முட்டாள் என்பதை அட்டாளைச்சேனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.உணர்ந்து கொள்வதோடு அதனை உணர்த்தவும் வேண்டும்.

 

இங்கு ஆணித்தரமான உண்மையை கூறிட விரும்புகிறேன்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை பலமாக ஆதரித்த ஊர் அட்டாளைச்சேனையாகும்.அங்கு எந்த வேட்பாளரும் இல்லாத நிலையில் அவர்கள் ஆதரித்திருந்தார்கள்.அவர்களின் வாக்கு இல்லையென்றால் மு.கா அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை ஒரு போதும் பெற்றிருக்காது.

 

அவர்களது ஊரில் போடப்பட்ட மயில் வேட்பாளரை அவர்கள் சிறிது ஆதரித்திருந்தாலும் மயில் அம்பாறையில் தோகை விரித்தாடிருக்கும்.மு.காவின் இராச்சியமே சரிந்திருக்கும்.மு.காவை பலப்படுத்திய அட்டாளைச்சேனைக்கு ஹக்கீமின் கைம்மாறு இது தானா?

Related posts

கைப்பற்றப்பட்ட 494 கிலோ 48 கிராம் ஹெராயின் போதைப்பொருட்கள் அழிக்கப்படவுள்ளது.

Maash

சுரேஸ் வருவீர் என்று தெரிந்தால் வந்திருக்க மாட்டேன்! மாவை சேனாதிராசா

wpengine

தாஜூடினின் படுகொலை! அநுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

wpengine