பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக தமிழர் நியமனம்

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக தமிழர் ஒருவர் நிர்வாக சேவை அதிகாரியான ஐ.ஜே.அதிசயராஜை இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழு நியமித்துள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு நிரந்தர செயராளராக அதிசயராஜை நியமிக்குமாறு கிழக்கு மாகாண சமாதன நீவான்கள் அமைப்பு உடபட பலரும் இணைந்து மகஜர் அனுப்பியிருந்தனர்.

தமிழனுக்கு ஒரு நீதி முஸ்லிமுக்கு ஒரு சலுகை என்ற நியதியை மாற்றி முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் குறுக்கீடுகள் இன்றி அதிசயராஜை அட்டாளைச்சேனை பதில் பிரதேச செயலாளராக நியமிக்குமாறு குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே நிர்வாக சேவை அதிகாரியான ஐ.ஜே.அதிசயராஜை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக நியமித்துள்ளனர்.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடும் மாவட்டங்களும், விபரங்களும்….!

wpengine

மன்னார் மாவட்ட காணி கபளீகரப்பிரச்சினைக்கு கொழும்பில் உயர் மட்ட மாநாட்டுக்கு ஏற்பாடு அமைச்சர் றிஷாட்

wpengine

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு – ஜூன் மாதம் 26 ஆம் திகதி!

Maash