(ஏ.எச்.எம். பூமுதீன்)
முகாவின் தேசியப்பட்டியல் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படமாட்டாதென தெரிய வருகின்றது.
அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படாத அந்த தேசிய பட்டியல் எம்பி பதவி வேறு ஊர்களுக்கும் வழங்கப்படப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், முகாவின் தேசிய பட்டியல் எம்பியாக தொடர்ந்தும் சட்டத்தரணி சல்மானே இருப்பார் .
அட்டாளைச்சேனையில் நாளை 16 ஆம் திகதி ஏட்பாடாகியுள்ள இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ள முகா தலைவர் ஹக்கீம் உட்பட அணைத்து உயர்பீட உறுப்பினர்களும் வருகை தரவுள்ளனர்.
இதன்போது, ஊருக்கான தேசியப்பட்டியல் தொடர்பில் இளைஞ்சர் குழுவொன்று கேள்விகளை தொடுக்க ஆயத்தமாகி வருகின்றது.
இது தொடர்பில் பூரண தகவல் அறிந்த ஹக்கீம், இன்று சகர் நேரத்தின் பின்னர் கட்சியின் அம்பாறை உட்பட முக்கிய பிரமுகர்களை அழைத்து கலந்துரையாடிய போதே அட்டாளைச்சேனைக்கு எம்பி பதவி வழங்க முடியாது என்ற முன்னர் எடுத்திருந்த தீர்மானத்தை சுட்டிக்காட்டி , நாளை அட்டாளைச்சேனைக்கு வரவா? வேண்டாமா? என்று மீள் கேள்வி எழுப்பியதாக இதில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.
” தலைவர், அப்பிடியல்ல. நீங்கள் வாருங்கள். நஷீருக்கா? அல்லது கபூருக்கா? எம்பி பதவியை வழங்க வேண்டும் என்று ஊர் முடிவை தாருங்கள். அப்போதுதான் என்னால் வழங்க முடியும் ” என்று மாறி அந்த ஊர் மக்களிடம் பந்தை எறிந்து விட்டு சமாளித்துக்கொண்டு வர முடியும் என அப்போது ஹக்கீமுக்கு ஆலோசனை கூறப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டதாம்.
அந்த வேளை, “ஊர் தீர்மானம் இவர்தான்” எனக் கூறினால் என்ன
பதில் கூறுவது என்பதட்கு பதிலளித்த ஒருவர், முன்கூட்டியே நஷீருடனும் கபூரிடமும் கூறி வெய்ப்போம் என்பதை ஹக்கீமும் ஏத்து, அவர்களுடன் நான் பேசுகின்றேன் என்றாராம்.
உண்மையில், அட்டாளைச்சேனைக்கு எம்பி பதவிக்கு பதிலாக- மீண்டும் பலமிக்க கிழக்கு மாகாண அமைச்சு பதவி ஒன்றையும் இரு நிறுவன தலைவர் பதவிகளையும் 100 தொழில் வாய்ப்புக்களையும் வழங்கி அட்டாளைச்சேனையை மகிழ்விப்பதே ஹக்கீமின் நோக்கமாக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாளை இப்தார் நிகழ்வுக்கு முன்பதாக சில வீதி விளக்குகளை ஒளிரவிடும் முகா தலைவர், சில நிமிட நேரமே இப்தாரில் பங்குகொள்வார் என மாகாண அமைச்சர் நஷீர் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன், பொலிஸார் அதிகளவு பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன்- நஷீர் ஆதரவு குழுக்களும் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனராம் என்றும் கூறப்படுகின்றது.
அட்டாளைச்சேனை எம்பி பதவியை வைத்து இன்னும் இன்னும் ஊரை ஏமாத்த இடமளிக்க விடுவதில்லை என்பதில் ஊர் இளைஞ்சர்கள் உறுதியாக உள்ளதே இந்த நிலைக்கு காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
அட்டாளைச்சேனையில் இப்தார் ஏட்பாடு ஒருபக்கம் நடக்க- மறுபக்கம் எம்பி கோஷமும் ஆவேசமாக களை கட்டுதாம் என்கிறார் அங்குள்ள முகா அன்பர் ஒருவர்.