பிரதான செய்திகள்

“அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள்

“அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,


“வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகளுக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டதென்றால் அது மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில்தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது
எங்களின் முன்னைய ஆட்சியில் எவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ அதேபோல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் துரிதமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


அதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சுற்றுலாத்துறை மற்றும் கல்வித்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்” – என்றார்.

Related posts

ஆளுநர் பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை

wpengine

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை

wpengine

நோபல் பரிசுக்கு மைத்திரியின் பெயர்

wpengine