பிரதான செய்திகள்

அடுத்த வாரம் தபால் வாக்களிப்பு

தபால்மூல வாக்குப்பதிவுகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், எதிர்வரும் 22ஆம், 25ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்குபதிவு இடம்பெற உள்ளது.

குறித்த தினங்களில் தபால்மூல வாக்கை பதிவுசெய்யாதவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில், வாக்குப்பதிவை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

குற்றமிழைக்காமல் 23 வருட சிறைவாசம்! நிசாரூதினின் சோகம்

wpengine

இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறு

wpengine

அம்பாறை,கண்டி மோதல் சிங்கள முஸ்லிம் பிரச்சினை அல்ல

wpengine