பிரதான செய்திகள்

அடுத்த வருடமும் மிகவும் நெருக்கடியான வருடமாக இருக்கும் எனக்கு பைத்தியமில்லை- ரணில்

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிக்கொள்வதற்கு எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லையெனத் தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் நெருக்கடியான வருடமாக இருக்கும் என்றும் கூறினார்.

பிரதமர் பதவியை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என தகவல்கள் கசிந்திருந்தன. அதில், உண்மை எதுவும் இருக்கின்றதா? என்பது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணிலிடம் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை அரசாங்கத்துக்குள் இணைத்துக்கொண்டால், பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்ப முடியுமென்பது பலரது கருத்தாக இருக்கிறதென பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

நாட்டில், தற்போது ஏற்பட்டிருக்கும் ஐக்கிய அமெரிக்க டொலர் பற்றாக்குறை, அடுத்தவருடம் ஜனவரி இறுதி வரையிலும் இருக்கும். பொருளாதாரமும் மிகவும் கடினமான நிலையில் நிற்கிறது என்றும் தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் கடினமான வருடமாக இருக்கும் என்றார்.

Related posts

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்த 435 அமைப்பு நீக்கம்

wpengine

தமிழ் இனத்தை இனிமேல் ஒன்றிணைக்கப் போவது அரசியல் அல்ல மொழிதான்-விக்கினேஸ்வரன்

wpengine

வடக்கு,கிழக்கு நோக்கி பயணமாக உள்ள பஷில்!

wpengine