பிரதான செய்திகள்

அடுத்த முதலமைச்சர் என்று தடுமாறிய விக்னேஸ்வரன்

வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்ததாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவைத் தலைவரை பார்த்து கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் 112வது அமர்வு நேற்று  இடம்பெற்ற நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான ஆரம்ப உரையினை முதலமைச்சர் நிகழ்த்தியிருந்தார்.

இதன் போது உரையாற்றிய

முதலமைச்சர், “முதலமைச்சர் அவர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர் அவர்களுக்கும், அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கும்” என விழித்து வணக்கம் தெரிவித்தார்.

இதனால் அவைத்தலைவர் உள்ளிட்ட சபையில் இருந்தவர்கள் சட்டென்று சிரித்தார்கள். எனினும், விடயத்தினை புரிந்து கொண்ட முதலமைச்சர், “அவைத்தலைவர் அவர்களுக்கு” என தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், “ஒருவேளை வருங்காலத்தை பற்றி சொல்கின்றேனோ தெரியவில்லை” என அவைத்தலைவரை பார்த்து முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

இப்படியும் அரசியல்வாதியா?

wpengine

டக்ளசுக்கு அமைச்சர் பதவி வழங்கியவர்கள் அதாஉல்லாவுக்கு ஏன் வழங்கவில்லை ?

wpengine

சண்முகா பாடசாலை ஆசிரியர் விவகாரம்! யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் கண்டனம்.

wpengine