பிரதான செய்திகள்

அடுத்த பிரதமர் யார்? கரு,சஜித்,அகில

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில வேளையில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய சூழ் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அனைவருக்கும் முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய சூழல் பிரதமருக்கு வரும் சந்தர்ப்பத்தில், அவராக பதவியை இராஜினாமா செய்து, அவர் விரும்பக்கூடிய ஒருவரான கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த பிரதமராக நியமிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

இதற்கு காரணம் ரணிலின் அதி விருப்பத்திற்குரியவராக அகிலவிராஜ் காரியவசம் இருப்பதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வார்த்தைக்கு மதிப்பளித்து செயற்படுபவராகவும் இருக்கின்றமையே ஆகும்.
அத்துடன், சபாநாயகர் கருஜெயசூரிய அடுத்த பிரதமராக நியமிக்கப்படக்கூடிய சாத்தியங்களும் நிலவுகின்றன.

இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களால் நியமிக்கப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சபாநாயகர் கருஜெயசூரிய ஊழல் அற்ற மற்றும் சிறந்த ஒருவராக இருப்பதே அதற்குரியா காரணமாகும்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களால், வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ பிரதமராக நியமிக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ஆனால் சஜித் பிரேமதாஸவை பிரதமராக முன்மொழிவதற்கு சிறிதளவேனும் ரணில் விக்ரமசிங்கவிற்கு உடன்பாடில்லை என அரசியல் அவதானிகளின் கருத்துக்களில் இருந்து தெரியவருகின்றது.

இந்த நிலையே தற்போது தென்னிலங்கையில் நிலவி வருவதுடன், சிறந்த முன்னுதாரணமாக செயற்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவாரா? அல்லது இந்த மூவரில் யார் பிரதமராக நியமிக்கப்படப்போகின்றார்கள்? இலங்கை அரசியலில் என்ன மாற்றம் நடக்கப்போகின்றது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இலங்கை அரசாங்கம் இப்படியான ஒரு சூழ் நிலையில் தத்தளிப்பதற்கு, மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதியால் முன்னைவைக்கப்பட்ட அறிக்கையின் காரணம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Related posts

வீதிப் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் விழிப்புணர்வு

wpengine

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு: அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

wpengine

மன்னார்,நானாட்டன் ஜனாதிபதி மக்கள் சேவையில் மக்கள் பாதிப்பு ! கண்டனம்

wpengine