பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அச்சுறுத்தல் இல்லாத நிலையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள தேவாலயங்கள்.

இக்பால்

நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அதிஉச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருகின்றது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லாத இன்றைய காலத்தில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதற்குள் அரசியல் காரணிகள் இல்லையென்று கூறமுடியாது.

ஆனால் 2019 இல் இவ்வாறு தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தால், பல அப்பாவிகளின் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும். அத்துடன் பாரிய அனர்த்தங்களும் தடுக்கப்பட்டிருப்பதுடன், சந்தேகத்தின் பேரில் குண்டு தாக்குதலுடன் தொடர்பில்லாத எவரும் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.    

இன்று எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தல்களோ அல்லது தாக்குதல் நடைபெறும் என்ற புலனாய்வுத் தகவல்களோ இல்லாத நிலையில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது கிறிஸ்தவ உலகினை திருப்திப்படுத்துவதற்கே அன்றி வேறொன்றுமில்லை.

2019 ஈஸ்டர் தினத்தில் நடைபெறப்போகின்ற பயங்கரவாத செயல்கள் பற்றிய முழு விபரங்களையும் முன்கூட்டியே துல்லியமான புலனாய்வுத் தகவல்களை பெற்றிருந்தும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அன்றைய அரசு முற்படவில்லை.

தற்கொலை தாக்குதல் ஒன்றுக்கான ஏற்பாடுகளும், அது நடைபெற உள்ள இடங்கள் பற்றிய விபரங்களையும், யார் தாக்குதல்களை நடாத்தப்போகின்றார்கள் என்ற தகவல்களையும் அறிந்திருந்தும், அன்றைய ஆட்சியாளர்களினால் அதனை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்ததானது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு அவர்களும் பங்காளிகள் என்பதனை காட்டுகின்றது.

எனவே பாதுகாக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அலட்சியமாக அல்லது வேடிக்கை பார்த்துவிட்டு, இன்று தேவாலயங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் படைகளை குவிப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை.

Related posts

பேஸ்புக்கில் பதிவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்ட யுவதி

wpengine

பேஸ்புக்காக பெயரை மாற்றிய ஞானசார தேரர்

wpengine

வர்த்தகர்களின் வரி உரிமத்தை இரத்து நடவடிக்கை – விவசாய திணைக்களம்!

Editor