பிரதான செய்திகள்

அசுத்தமான நீரை குடிநீராக மாற்றும் நிகழ்வு! நிராகரிக்கப்பட்ட ஹக்கீம்

அசுத்தமான தண்ணீரை சுத்திகரித்து குடி நீராக மாற்றும் நவீன உதிரிப்பாகங்களை கொண்ட புதிய தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

தனியார் நிறுவனம் ஒன்று இந்த தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

எப்படியான அசுத்த நிலையில் இருக்கும் தண்ணீரையும் சில வினாடிகளில் குடிநீராக மாற்றும் வகையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

பிரித்தானியாவில் இருந்து இந்த இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஜனாதிபதி பார்வையீட்டார்.

 

இந்த நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் ஆன மகிந்த அமரவீர, ரவி கருணாநாயக்க, றிஸாட்  பதியூதீன், துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Related posts

அதிபர் இலஞ்சம் ஊழல்கள் ஆணைக்குழுவினால் கைது

wpengine

பழமையான நாணயக்குற்றிகளை விற்பனை செய்ய முயன்ற மன்னார் இளைஞர் கைது!

Editor

முகக்கவசம் இல்லாதவர்களுக்கு வவுனியாவில் தண்டப்பம்

wpengine