பிரதான செய்திகள்

அசாத் சாலியை இறக்குமதி செய்யவில்லை.

சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு பொறுப்பான கட்சியின் அமைப்பாளர்கள் இருவருக்கு இடையில் ஒற்றுமையில்லாத காரணத்தினாலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு வேட்பு முனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல் சட்டங்களை சரியான முறையில் அமுல்படுத்துமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். தேர்தலில் வெற்றி பெற அரசாங்கத்தின் அதிகாரங்கள் தேவையில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேயர் வேட்பாளராக அசாத் சாலியை இறக்குமதி செய்யவில்லை.

இம்முறை தேர்தல் இனவாதத்தை ஒழித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தேர்தல் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலையில் முடிந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிய தலைவர்கள் உருவாக வேண்டும். அது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பெரிய பலமாக அமையும்.

இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிரி யார் என்பது கிராமங்களில் வாழும் மக்களுக்கு தெரியும். அதற்கு அமைய மக்கள் வாக்களிப்பார்கள் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி தேர்தல்! கருத்தரங்குளை நடாத்த உள்ள ரணில்

wpengine

பிரதேச செயலக உத்தியோகத்தரின் காடைத்தனம்! கணவன்,மனைவி வைத்தியசாலையில்

wpengine

அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்ற சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது!  

Editor