பிரதான செய்திகள்

அசமந்தத்தினாலும், தூக்கத்தினாலும் மன்னார் முசலிப்பிரதேச நிருவாகிகள் முகநூலில் இருந்து

அசமந்தத்தினாலும், தூக்கத்தினாலும் மன்னார் முசலிப் பிரதேச நிருவாகிகள் லஞ்சம் வாங்குவதில் விழிப்பாக இருக்கிறார்கள்.

மன்னார் முசலிப் பிரதேசத்தில் பொது மக்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக உரிய காரியாலயங்களுக்குச் சென்றபோது, அங்குள்ள அதிகாரிகள் அம்மக்களை நாளை வாருங்கள் என்று அனுப்புகின்றனர். அடுத்தநாள் சென்றபோதும் நாளை வாருங்கள் என்று தொடர்ச்சியாக சிறிய கடமையைக்கூட நிறைவேற்றிக் கொடுக்காமல் அனுப்புவதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறைகள் திருப்பி அனுப்பியதன் பின்னர் மீண்டும் சென்றபோது குறித்த விடயத்தை செய்வதற்காக தனது கையடக்க தொலைபேசிக்கு 250 அல்லது 500 ரூபாவை RELOAD செய்யுமாறு கேட்டுள்ளார். RELOAD செய்ததன் பின்னரே சென்றதும் ஒரு ஐந்து நிமிடத்தில் குறித்த வேலையை செய்து முடிக்கின்றனர்.

அவ்வாறு ஐந்து நிமிடத்தில் நிறைவேற்றி முடிக்க வேண்டிய வேலையை கிழமைக் கணக்கில் காலம் தாழ்த்தி நிறைவேற்றிக் கொடுக்கின்றனர். பொது மக்களை ஒவ்வொரு நாளும் அலையவிடுகின்றனர்.

அண்மையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் முறைப்பட்டுக் கொண்டார்.

Related posts

நம்பிக்கையில்லாப் பிரேரனை ஊடாக பாடம் எடுக்கும் மஹிந்த

wpengine

புதிதாக எதையும் நாம் கேட்கவில்லை எமது பூர்வீக பூமியை தாருங்கள்-அமீர் அலி

wpengine

கடலில் மூழ்கி மூன்று இளைஞர்கள் மாயம்!

Editor