பிரதான செய்திகள்

அங்கம் வகிக்க வேண்டுமா? இல்லையா?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டுமா? இல்லையா? என்பது ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டிய விடயம் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவத்தின் பின்னர் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகளை ஆரம்பித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 8 அடி நீளமான தொலைக்காட்சியை நான் கொள்வனவு செய்துள்ள குற்றம் சுமத்தப்படுகிறது.

எனினும் அதில் உண்மையில்லை. புதிய சனசமுக நிலையத்திற்காக ஸ்மார்ட் தொழிற்நுட்பத்துடன் கூடிய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

முன்னேறும் உலகத்துடன் நாமும் முன்னேற வேண்டும். 100 முதல் 150 வருடங்கள் முன்னோக்கியவர்களாக நாம் செயற்பட வேண்டும் எனவும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மன்னார் மீனவர்களுக்கு சந்தோஷமான செய்தி

wpengine

பி.பீ ஜயசுந்தர பதவி விலகவேண்டும் என்று சமல் ராஜபக்ச வலியுறுத்த விடுத்தார்.

wpengine

மைத்திரி,கோத்தா ஆகியோரை கொலை செய்ய ரணில் சதி

wpengine