Breaking
Sun. Nov 24th, 2024

கடந்த 2004 ஆம் ஆண்டு காணாமல் போய் 16 வருடங்களின் பின்னர் கடந்த 29 ஆம் திகதி தனது தாயை தேடி வருகைத்தந்த 21 வயதான இளைஞனுக்கு மற்றுமொரு தாயாரும் உரிமை கோரியுள்ளார்.

சம்மாந்துறையில் வசிக்கும் அபுசாலி சித்தி ஹமாலியா என்ற தாய், கடந்த திங்கட்கிழமை சுனாமியால் காணமல் போயிருந்த தனது மகன் ராசீத் மொஹமட் அக்ரம் ரிஸ்கான் என்பவர் தன்னை தேடி வந்ததாக கூறியிருந்தார்.

ராசீத் மொஹமட் அக்ரம் ரிஸ்கான் என்ற இளைஞனின் வயிற்று பகுதியில் பிறக்கும் போதே ஏற்பட்ட தழும்பு காணப்பட்டதை அவதானித்த பின்னரே அவரை தனது மகன் என உறுதிப்படுத்திக் கொண்டதாக குறித்த தாய் தெரிவித்திருந்தார்.

அதுவரை அவர் அம்பாறை நகரை அண்மித்து வாழும் சிங்கள் இன குடும்பத்தில் வாழ்ந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் ஊடகங்களில் வெளியான நிலையில் மற்றுமொரு பெண் ராசீத் மொஹமட் அக்ரம் ரிஸ்கான் தனது மகன் என உரிமை கோரி சாய்ந்தமருது பொலிஸில் முறையிட்டுள்ளார்.

அம்பாறை ஒல்மன்கல பகுதியில் வசிக்கும் ஜூனைட் நுரி இர்சானி என்ற தாயே இவ்வாறு முறையிட்டுள்ளார்.

தனது பிள்ளையின் சிறுவயது முதலான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் உள்ளதாக அந்த தாயார் தெரிவித்துள்ளார்.

குறித்த இரு தாயாரும் மற்றும் சம்பந்தப்பட்ட இளைஞனும் நேற்று (01) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது இரு தாயாரும் ராசீத் மொஹமட் அக்ரம் ரிஸ்கான் என்ற இளைஞனுக்கு உரிமை கொண்டாடிய நிலையில் உண்மையான தாயை கண்டுபிடிக்க மரபணு பரிசோதனையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *