பிரதான செய்திகள்

‘அக்சஸ் யு.கே.’ இணையம் ஊடாக பிரிட்டன் விசா

இலங்­கை­யி­லுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­ய­மா­னது , புதிய இணை­யத்­தள விண்­ணப்பப் படி­வத்தைப் பயன்­ப­டுத்தி பிரித்­தா­னி­யா­வுக்­கான விசாக்­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்கள் மிகவும் இல­கு­வாக விண்­ணப்­பிக்க முடியும் என அறி­வித்­தள்­ளது.

‘அக்சஸ் யு.கே.’ என்­ற­ழைக்­கப்­படும் இந்த இணை­யத்­தள விண்­ணப்பப் படிவம் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட தர்க்க ரீதி­யான கேள்­வி­க­ளு­ட­னான குறு­கிய படிவம், எடுத்துச் செல்­லக்­கூ­டிய நட்­பு­ற­வான முறைமை, அனு­ம­தி­யின்றி பய­ணத்தை மேற்­கொள்ளக் கூடிய ஐரோப்­பிய ஷெங்கன் பிராந்­திய நாடு­க­ளுக்­கான விசா படி­வங்­களின் பதி­வி­றக்கம் ஆகிய வச­திகள் உள்­ள­டங்­க­லாக ஒரு தொகை அனு­கூ­லங்­களை வழங்­கு­வ­தாக உள்­ளது.

பிரித்­தா­னிய விசா­வுக்கு விண்­ணப்­பிக்க விரும்பும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விரை­வா­னதும் இல­கு­வா­ன­து­மான விசா சேவையை வழங்க பிரித்­தா­னியா அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ள­தாக பிரித்­தா­னிய விசாக்கள் மற்றும் குடி­வ­ர­வுக்­கான தென் மற்றும் தென் கிழக்கு ஆசியப் பணிப்­பாளர் நிக் குரோச் தெரி­வித்தார்.

மேற்­படி ‘அக்சஸ் யு.கே.’ விசா விண்­ணப்பப் படிவம் 2014 ஆம் ஆண்டில் சீனாவில் வெற்­றி­க­ர­மாக ஆரம்­பித்து வைக்­கப்­பட்­ட­போது , அதற்கு வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து பெரும் வர­வேற்புக் கிடைத்­த­தாக குறிப்­பிட்­டுள்ள கொழும்­பி­லுள்ள பிரித்­தா­னிய தூத­ரகம், மேற்­படி விசா விண்­ணப்ப முறை­மை­யா­னது இலங்­கை­யி­லி­ருந்து வாடிக்­கை­யா­ளர்கள் பிரித்­தா­னி­யா­வுக்கு விஜயம் செய்­வதை ஊக்­கு­விக்கும் என நம்­பு­வ­தாக தெரி­வித்­தள்­ளது.

வர்த்­தக உற­வுகள் மற்றும் கலா­சார பரி­மாற்றம் என்­ப­வற்­றி­னூ­டாக பிரித்­தா­னி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் பல­மான உறவு நில­வு­வ­தாக இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரி­வித்தார்.

மேற்­படி விசா விண்­ணப்ப முறை­மை­யி­னூ­டாக வர்த்­தக மற்றும் சுற்­றுலா விசாக்­க­ளுக்கு இல­கு­வாக வண்­ணப்­பிக்க முடியும் என அவர் கூறினார்.

மேற்­படி ‘அக்சஸ் யு.கே.’ விசா விண்­ணப்­பப்­ப­டி­வத்தை http://www.gov.uk/apply-uk-visa என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அதேசமயம் ஏனைய வழிமுறைகளில் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்காக Visa4UK இணையத்தள முகவரி தொடர்ந்து பயன்பாட்டிலிருக்கும் என அந்தத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டம் வவுனியாவில்

wpengine

முகக்கவசம் அணியாமல் தள்ளுவண்டி வந்தவர் கைது

wpengine

றிஷாத்தின் பாராளுமன்ற உரை! அமைச்சரவையில் இன்று தாக்கம்!

wpengine