செய்திகள்பிரதான செய்திகள்

அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சிராஜுதீனின் மரணச் செய்தி குறித்து, அனுதாபம் தெரிவித்த ரிசாட் எம்.பி.

“சிராஜுதீனின் நற்பணிகளை ஞாபகமூட்ட கட்சி கடமைப்படும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

மானிடரின் நிலையில்லா வாழ்வினை அடிக்கடி நிகழும் எதிர்பாராத மரணங்கள் உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பிரதம பொறியியலாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான சிராஜுதீனின் மரணச் செய்தி குறித்து, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றித் தெரிவித்த அவர்,

“துன்யாவின் அந்தஸ்துக்களை பொருட்படுத்தாத மானிட நேயன் மர்ஹூம் சிராஜுதீன். பட்டம், பதவிகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, பொதுப்பணி செய்த பெருந்தகையாகவே அவரை நான் கண்டேன்.

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அபிவிருத்திக் குழு உறுப்பினராகச் செயற்பட்ட காலத்தில், பாடசாலை வளர்ச்சிக்காக பல்முனைப் பார்வைகளில் சிராஜுதீன் குறிவைத்தார். ஒன்பது அடுக்குமாடிக் கட்டடத்தைப் பெறுவதிலும் இவரது பங்கு மிகக் காத்திரமானதே!

அவர் எமது கட்சியுடன் இணைந்து, கடந்த மாநகர சபை தேர்தலில் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். அவரது நற்பண்பையும் கல்வியறிவையும் கடந்த கால சேவைகளையும் கண்டுகொண்டுதான், கட்சிக்குக் கிடைத்த போனஸ் ஆசனத்தை அவருக்கு வழங்கி, அவரை கௌரவப்படுத்தினோம். அதனை, எமது கட்சிக்கான கௌரவமாகவும் கல்விச் சமூகத்திற்கு கட்சி வழங்குகின்ற அங்கீகாரமாகவுமே நாங்கள் பார்க்கின்றோம். கல்வியியலாளர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எமது கட்சியின் நிலைப்பாட்டின் அடிப்படையில், அந்த போனஸ் ஆசனத்தை அவருக்கு வழங்கியதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

எல்லோருக்கும் பொதுவான மரணத்தை நிச்சயித்த எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரைப் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்ந்த சுவன பாக்கியத்தை அருள்வானாக! அவரது குடும்பத்துக்கும் ஆறுதலளிப்பானாக! ஆமீன்!

Related posts

தையல் இயந்திரங்களை வழங்கி வைத்த சல்மா அமீர் ஹம்ஸா

wpengine

டிசம்பர் முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு: சமுர்த்தி பயனாளிகள் அல்லாதோர் பாதிப்பு

wpengine

வெள்ளவத்தையில் கரை ஒதுங்கிய மீன்! பலர் அச்சம்

wpengine