பிரதான செய்திகள்

அக்கரைப்பற்றுப் பிரதேச சபைக்குப் புதிய விவாகப்பதிவாளர் நியமனம்.

(கே.சி.எம்.அஸ்ஹர்)

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களுக்கான முஸ்லிம்  விவாகப்பதிவாளராக,79/1பள்ளி  வீதி பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த “ஆதம் லெப்பை முகம்மது இப்றாஹிம் (மௌலவி)” அவர்கள் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டப்பிரகாரம் பண்பாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றுப் பிரதேச சபை அமைக்கப்பட்டபின் நியமிக்கப்பட்ட முதல் விவாகப்பதிவாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மர்ஹம்களான ஆதம்லெவ்வை,மரியம் பீவி தம்பதிகளின் கணிஷ்டப் புதல்வாரன இவர் அக்கரைப்பற்றுத் தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார். இவர் தனது அல் ஆலிம் பட்டத்தை “கண்டி ஹந்தஸ்ஸ லீமகஹ கொட்டுவ , பட்டுப்பிட்டிய ~மின் ஹாஜியா அரபுக்கல்லூரியில் கற்றுப்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிட்த்தக்கது.

அக்கரைப்பற்று பள்ளிக் குடியிருப்பு பெரிய பள்ளி வாயல் பிரதம பேஸ் இமாமான இவர் திருமண வைபவம், சிரமதானம்,இறப்பு,பிறப்பு நிகழ்வுகள் போன்றவற்றிலும் சமாதான சகவாழ்வு நிகழ்வுகளிலும் பெரும் பொதுசேவை செய்து வருகின்றார்.

பொது மக்களோடு மிகவும் கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ளும் இவருக்கு இப்பதவி கிடைத்ததை இட்டு பிரதேச மக்கள் மகிழ்வடைந்துள்னர்.

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குத் தனியான விவாகப்பதிவாளர் நியமிக்கப்பட வேண்டும் என்ற எமது செய்திக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.

Related posts

நெற் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம்!

Editor

சாய்ந்தமருதின் மறுமலர்ச்சி எப்போது?

wpengine

Mozilla Firefox பயண்படுத்துவோருக்கு எச்சரிக்கை

wpengine