பிரதான செய்திகள்

அக்கரைப்பற்றில் புறக்கணிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள்.

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்’,சம்மாந்துறை)

அக்கரைப்பற்று உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நேற்று 07-10-2016ம் திகதி ஏற்பாடாகியிருந்தது.அது சில அரசியல் காரணங்களால் இன்று 08-10-2016ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகிருந்த அணியின் முன்னணி விளையாட்டு வீரர்கள் இருவருக்கு  நாளை  உதைப்பந்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்படும் வருடாந்த உதைப்பந்தாட்ட மத்தியஸ்தர் தரப்படுத்தல் பரீட்சை நடைபெறவுள்ளதால் அவர்களால் அப் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

இது விளையாட்டு துறையுடன் சம்பந்தப்பட்ட பரீட்சை என்பதால் அதனை குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.பல நாள் முயற்சி செய்து அவ் அணியினர் தங்கள் வெற்றியை சுவைக்கவுள்ள இறுதிச் சந்தர்ப்பத்தில் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்கத்தகுந்த விடயமுமல்ல.இதனை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் கவனத்திற் கொள்வார்களா?unnamed

 

Related posts

தேசிய பட்டியல் விவகாரம்! பசீர், ஹசன், நிஸாம் நம்பிக்கை குறைந்தவர்கள்.

wpengine

வடக்கு முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பாதுகாப்பதற்காகவே! வெளியேற்றினார்கள் -அரியநேத்திரன்

wpengine

மாசற்ற அரசியல் செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்

wpengine