Breaking
Fri. Nov 22nd, 2024

(அஷ்ரப் ஏ சமத்)

அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் ஸ்தாபகா் தினம் கடந்த வெள்ளிக்கிழமை (11) கொழும்பு தாபலக கேட்போா் கூடத்தில்  அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் தலைவா் பி.எம் பாருக் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சட்டம் ஓழுங்கு மற்று பொதுநிருவாக முகாமைத்துவ அமைச்சா் ரன்ஜித் மத்துமபண்டா கலந்து சிறப்பித்தாா். கௌரவ பேச்சாளராக வல்பொல ராகுல பௌத்த கல்வி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளா் கல்கன்த தம்மானாந்த தேரோவும், முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காரும்  கலந்து கொண்டாா்.

முன்னாள் சபாநாயகா், ஆளுணா் கல்வி சுதேசிய கலாச்சார அமைச்சராக சேவையாற்றிய டப்ளியு ஜே.எம். லொக்கு பண்டாரவை முஸ்லீம் லீக் வாலிப முன்ணியின் சாா்பாக அவா் முஸ்லீம் சமுகத்திற்காக யுனானி மருத்துவத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக அவருக்கு ராஜகிரியவில் உள்ள  ஆயுள்வேத பல்கலைக்கழகத்தின்  யுனானி மருத்துவப் பிரிவின் தலைவா் மற்றும் அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் முன்னாள் தலைவா் என்.எம்.அமீன் ஆகியோரினால் அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சா் லொக்கு பண்டார முன்னாள் சபாநாயகா்  எம்.ஏ பாக்கீா் ்மாாக்காா், இம்தியாஸ் பாக்கீா் ்மாா்க்காா் அவா்களின் வேண்டு கோலுக்கிணங்க  முஸ்லீம்களின் பாரம்பரிய மருத்துவமான யுனானி மருத்துவத்திற்காக ஆயுல்வேத பல்கலைக்கழகத்திற்கு தணியான ஒரு மருத்துவ பல்கலைக்கழகம், அத்துடன் ஆயுல்வேத வைத்தியசாலையில் யுனானி மருத்துவத்திற்கான தணியானதொரு வாட், ஊவா பண்டருகமவில் ஒரு இவ் வைத்தியத்திற்காக ஒரு வைத்தியசாலையையும் அரசாங்கம் ஊடாக ஏற்படுத்தியமைக்காக அவரை முஸ்லீம்கள் சாா்பாக நினைவு கூாந்து அவருக்கான கௌரவததினை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *