பிரதான செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கையை பலப்படுத்துவோம் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

புல்மோட்டை பிரதேசத்துக்கான தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் புதிய அபிவிருத்தி திட்டங்களை திறந்து மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

துரித அபிவிருத்தியில் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அபிவிருத்திகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்குவதன் மூலமாக மிக விரைவான திட்டங்கள் ஊடாக நடைமுறை படுத்தப்படவுள்ளது.
பாரியளவிலான திட்டங்களை கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றுலாத் துறை என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்காக தனது பூரண ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம்.

பல மில்லியன் ரூபா செலவில் பல திட்டங்களை அபிவிருத்திக்காக செய்துள்ளோம். எதிர்வரும் காலங்களிலும் செய்வதற்கான சகல வித முன்னாயத்தங்களும் இடம்பெற்று வருகின்றன.

மாகாண சபைத் தேர்தலை விரைவில் எதிர்நோக்கவுள்ளோம். சரியான திட்டங்களை வகுத்து மக்கள் ஏற்று கொள்ளக்கூடிய வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.
மீள்குடியேற்ற அமைச்சு, மீள் குடியேற்ற செயலணி ஊடாக பல முன்னெடுப்புக்கள் இப் பகுதியில் இடம்பெறவுள்ளன.

மக்களுடைய அபிலாசைகளை வென்றெடுக்க பல துரிதமான திட்டங்களை துரிதப்படுத்தி சமூக எழுச்சிக்கான போராட்டமாக அமைய வேண்டும்.

மாகாண சபை தேர்தலில் தங்களுடைய நியாயங்களை உறுதிப்படுத்தி அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கையை பலப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

சமுர்த்தி பயனாளிக்கு 10000ரூபா முற்பணம்! அமைச்சரவை

wpengine

மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்

wpengine

பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்க முடிவு!

Editor