ஹைட்பார்க் மைதான கூட்டத்தில்! சு.க உறுப்பினர்கள்; சோமவன்சவும் வந்தார்.

கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் மக்கள் பொதுக் கூட்டமொன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைமை, அறிவித்திருந்த நிலையிலும், அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர், அதில் கலந்துகொண்டுள்ளனர். சு.க.வின் உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகே, பவித்ரா வன்னியாரச்சி, டி.பீ.ரத்நாயக்க, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரவீரவும், கூட்டு எதிரணியின் மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares