Breaking
Wed. Dec 11th, 2024

ஏறாவூர், மீராகேணி ஹிஸ்புல்லாஹ் நகர் பகுதியில் கையடக்க தொலைபேசியின் சார்ஜர் இணைக்கப்பட்டு, காதில் ஹெட்செட் இருந்த நிலையில் இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அப்துல் ஹாலிக் பௌமி எனும் 18 வயது இளைஞரே அவரின் வீட்டில் இருந்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

உறங்கியவாறு நீண்ட நேரம் கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் இறந்து விட்ட சம்பவம் பற்றி தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞன் கட்டிலில் சாய்ந்தவாறு நீண்ட நேரமாக கையடக்க தொலைபேசில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர் குறித்த இளைஞன் அசைவற்று படுத்துக் கிடந்துள்ளதை அவதானித்த குடும்பத்தினர், அவரை தட்டி எழுப்பியபோது அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டிருந்ததாக பொலிஸ் வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் ஒரு இருதய நோயாளி என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *