பிரதான செய்திகள்

ஹிஸ்புல்லாஹ்வின் சேவையில்! பெயர் வைக்க பார்க்கும் ரவூப் ஹக்கீம்

(ஹபீல் எம் சுஹைர்)

சில நாட்கள் முன்பு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அலுத்கமை கலவரம் தொடர்பில் உரையாற்றிய போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ள அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது விடயத்தில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அனைத்தும் முடியும் இறுதி தறுவாயில் குறித்த அமைச்சரவை பத்திரத்தை சிலர் எதிர்த்த போது அமைச்சர் ஹக்கீமும் சற்று பேசியுள்ளார்.இதனை வைத்து, இதனை தானே செய்தது போன்று தனது ஊடகவியலாளர்களை கொண்டு செய்தி எழுதி வெளியிட்டிருந்தார்.

அச் செய்தியை வெளியிட்டவர் ஹக்கீமின் ஊடக பிரிவில் பணியாற்றுபவர். குறித்த விடயத்தில் தொடர் முயற்சிகளை செய்து வரும் ஹிஸ்புல்லாஹ் இவ் விடயத்தை சிறிதும் வெளிப்படுத்தாத நிலையில் ஹக்கீமின் ஊடக பிரிவு இதனை செய்திருந்தது. இதனைத் தான் நிறைகுடம் நீர் தளும்பல் இல்லை என கூறுவார்கள்.

ஒரு பிள்ளைக்கு உரிமை கொண்டாட, பிள்ளை கிடைக்கப்பெற்ற பெண்ணுடன் உறவு கொண்டிருத்தல் உட்பட எத்தனையோ விடயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அப் பெண் குழந்தை பெற வைத்தியாசாலை செல்ல ஓட்டோ பிடித்து கொடுத்து விட்டு நானும் அப் பிள்ளையின் தந்தை எனலாமா? இது போன்றே அமைச்சர் ஹக்கீம் நிலை உள்ளது.

அமைச்சர் ஹக்கீம் உறுதியாக இருந்தால் தன்னிடம் உள்ள கட்சியின் அதிகாரத்தை கொண்டு எத்தனையோ விடயத்தை செய்யலாம். அதனை விட்டுவிட்டு ஹிஸ்புல்லாஹ்வின் பெரும் முயற்சியில் பெறப்பட்ட இவ்விடயத்துக்கு இறுதியில் பெயர் பெறும் இழி செயலை செய்துள்ளார்.

Related posts

ரணில்,மைத்திரி அரசுக்கு சவால் மஹிந்த

wpengine

மன்னார் மீனவ சங்கங்களின் பிரச்சினை! தென்னிலங்கை மீனவர்கள் தொழிலை மேற்கொள்ள முடியாது அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

தெல்தெனிய சம்பவம் பொலிஸாரின் செயற்பாடு தொடர்பிலும் சந்தேகம் மஹிந்த

wpengine