பிரதான செய்திகள்

ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் அனுபவம் அமைச்சை வழிநடத்த ஒத்துழைப்பாக அமையும்

“தனது அமைச்சின் இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் அனுபவம் அமைச்சை வழிநடத்த ஒத்துழைப்பாக அமையும்” என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:

“இராஜாங்க அமைச்சரை மிகவும் அன்புடன் வரவேற்கின்றேன். 1994ஆம் ஆண்டு முதல் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் நானும் நாடாளுமன்றத்தில் மிகவும் நெருக்கமான நண்பர்களாக பல விடயங்களைச் செய்துள்ளோம். அவர் அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கின்ற காலத்தில் எனக்கு பல்வேறு ஒத்துழைப்புக்களையும் செய்துள்ளார்.

இவர் அரசியல் ரீதியாக பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்கள் இந்த அமைச்சை திறம்பட வழிநடத்த எனக்கு ஒத்துழைப்பாக அமையும் என நான் நம்புகின்றேன்.

இந்த அமைச்சிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு செய்ய முடியும். இருவரும் இணைந்து மிகப்பெரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்றார்.

Related posts

சதொச நிறுவனத்துக்கு கொக்கெயின் கொண்டுவரப்பட்டது எவ்வாறு?

wpengine

அனுமதிப் பத்திரம் இல்லாத பஸ் உரிமையாளர்களுக்கு இன்று முதல் 2,00,000 ரூபா அபராதம்

wpengine

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

wpengine