ஹாபிஸ் நஸீர் அஹமட்டிற்கு முப்படை தளங்களுக்குள் பிரவேசிக்கத் தடை

முப்படை தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்படை, விமானப் படை மற்றும் இராணுவ படைத் தளங்களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்றம் அலவி குறிப்பிட்டுள்ளார்.

கடற்படை அதிகாரியுடன் நடந்து கொண்ட விதம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.

மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் எந்தவித நிகழ்வுகளுக்கும் முப்படையினரின் ஒத்துழைப்புகளை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கெப்டன் அக்றம் அளவி தெரிவித்துள்ளார்.

சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியுடன் நடந்து கொண்ட விதம் தொடர்பில் கடற்படையினர் றேம்கொண்ட விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares