பிரதான செய்திகள்

ஹஸன் அலி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து நியாயம் வழங்க குழுவை நியமிக்க தீர்மானம்!

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் நேற்று இரவு (03) நடைபெற்றது.இதில் முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி அணியைச் சேர்ந்தவர்கள் என சித்திரிக்கப்படும் கட்சியின் செயலாளர் நாயகமான எம்.ரீ.ஹஸன் அலி மற்றும் கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் உட்படலானவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் ஹஸன் அலி மற்றும் பஷீர் ஷேகு தாவூத் உட்படலான அனைவரும் மிக நெருக்மான முறையில் கலந்துரையாடி தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக கட்சிக்குள் எரிமலையாக கொதித்துக் கொண்டிருக்கும் கட்சியின் செயலாளர் நாயகமான எம்.ரீ. ஹஸன் அலி விவகாரம் தொடர்பில் ஒரு குழுவை நியமித்து அதன் மூலம் அவருக்கு நியாயத்தை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ரணிலின் திட்டத்தை ரத்துசெய்த மைத்திரி! பிரயோசனமில்லை

wpengine

வவுனியா, ஓமந்தை பகுதியில் ரயிலில் மோதி 16 எருமைகள் பலி!

Editor

புத்தாண்டு காலப்பகுதியில் அரிசியின் விலை 250ரூபா ஆகும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன்

wpengine