ஹட்டன் – புளியாவத்த மக்களின் தொடரும் நீருக்கான போராட்டம்

ஹட்டன் – புளியாவத்த பகுதி மக்கள் கடந்த 2 வாரங்களாக குடி நீர் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறையே பவுசர் மூலம் குடி நீர் விநியோகிக்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரதேசத்திற்கு குடி நீர் வழங்குவதற்காக அம்பகமுவ பிரதேச சபையினால் பொருத்தப்பட்டருந்த இயந்திரம் பழுதடைந்தமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

பவுசர் மூலம் பிரதேச சபையினால் விநியோகிக்கப்படும் நீர் தமது தேவைக்கு போதுமானதாக இல்லை என மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

அரச ஊழியர்கள் தாம் வேலைக்கு சென்ற பின்னர் நீர் விநியோகிப்பதினால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

புளியாவத்தை பகுதிக்கு தேவயைான குழாய் நீர் விநியோகத்தில் காணப்பட்ட குழறுபடிகள் நிவர்த்திக்கப்பட்டு நீர் விநியோகம் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் அம்பகமுவ பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares