ஹஜ் கடமைக்கு வௌிநாடுகளில் இருந்து ஹாஜிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

10,000 பேர் மாத்திரமே இம்முறை ஹஜ் கட​மையில் ஈடுபடலாம் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

COVID-19 அச்சுறுத்தல் காரணமாக இம்முறை ஹஜ் கடமைக்கு வௌிநாடுகளில் இருந்து ஹாஜிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் சமூக இடைவௌியைப் பேணியும், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியும் 10,000 பேருக்கு ஹஜ் கடமையில் ஈடுபடுவற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

65 வயதிற்கு குறைந்தவர்களுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன், வௌிநாடுகளில் இருந்து ஹாஜிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது.

வருடாந்தம் சுமார் 3 மில்லியன் பேர் புனித மக்கா நகரில் ஹஜ் கடமைக்காக ஒன்றுகூடுகின்ற நிலையில், COVID-19 அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சவுதியில் இதுவரை 1,64,000 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 1,346 மரணங்கள் சம்பவித்துள்ளன.

இதேவேளை, இம்முறை ஹஜ் கடமையில் ஈடுபடுவதற்காக 25,000 ரூபா முற்கொடுப்பனவு வழங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் நாளை (25) அறிவிக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares