பிரதான செய்திகள்

ஹக்கீம்,றிஷாட் பதியுதீன் இணைந்து புதிய கூட்டணி அமைக்க நடவடிக்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தனியான முஸ்லிம் கூட்டணியை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரண்டு கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மாத்திரமே நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சிகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளன.

Related posts

பிரதி அமைச்சர் அமீர் அலியின் முயற்சியில் களுதாவளையில் பொருளாதார நிலையம்

wpengine

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்

Editor

அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்தது தான் அனர்த்தத்துக்கு காரணம்-மஹ்ரூப்

wpengine