ஸ்ரீகாந்தா வெளியிட்ட கருத்து தொடர்பில் ரெஜினோல்ட் குரே

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா வெளியிட்ட கருத்து தொடர்பில் தனியான
செய்தியாளர் சந்திப்பான்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
தாம் தென்னிலங்கையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் பிழையான அர்த்தம் கற்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அந்த செய்தியாளர் சந்திப்பில் தாம், வடக்கு மாகாண முதல்வருக்கோ, அல்லது வட மாகாண சபைக்கோ எதிராகவே கருத்துக்களை வெளியிடவில்லை.

எனினும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தாம் வட மாகாண சபை குறித்து குற்றம்
கூறியதாக தெரிவித்திருந்தார்.

அவர் இந்த தகவலை எங்கிருந்து பெற்றிருந்தார் என்பதை தெரிந்துகொள்ள விரும்புவதாகவும்
ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். தமக்கு புதுமையான சமாதானம் ஒன்று அவசியமில்லை
என குறிப்பிட்ட ரெஜினோல்ட் குரே எதிர் நடவடிக்கை மேற்கொள்ளாமையால் முன்னரை போலவே வட மாகாண சபையுடன் இணக்கத்துடன் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலை தீவுகளிற்கான தூதுவர் டேவிட் டலியிடம் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக வாழ்வாதார திட்டங்கள் மற்றும் வீடமைப்பு திட்டங்கள், வடக்கு மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உறவு போன்றவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, வடக்கு முதலமைச்சருடன் சமாதானத்துடன் செயற்படுவதாகவும் அவருடன் தமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் ரெஜினோல்ட் குறிப்பிட்டார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares