பிரதான செய்திகள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விரைவில்

விரைவில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
நேற்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டது, அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீக்குவதற்காக அல்ல என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகவே என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரவை பேச்சாளர் என்ற வகையில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதில் எவ்வித பிரச்சினையும் இவ்லை என்றும், சில அரசியல் நிலைப்பாடுகளை வௌிப்படுத்தும் போது ஏற்படுகின்ற சிக்கல்களை தவிர்த்துக் கொள்வதற்காகவே இந்த மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

Related posts

பாத யாத்திரை: எதைப்பிடுங்கப் போகிறது

wpengine

சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்

wpengine

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம் கட்சிகள் ஒன்றினைய வேண்டும்.

wpengine