பிரதான செய்திகள்

வைத்தியர் இல்லாத சிலாவத்துறை வைத்தியசாலை! இல்லையென்றால் சாகும்வரை உண்ணாவிரதம்

(முசலி  அமூதன் அலிகான் சரீப்)

அன்பிற்கும் நன் மதிப்பிற்கும் உரிய வட மாகாண சுகாதார அமைச்சர் அவர்களுக்கும் அவரின் கீழ் பணியாற்றுகின்ற அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு விசித்திரமும் வினோதமும் நிறைந்த செய்தி ஒன்றை தருவதில் மிகுந்த துயர் அடைகின்றேன்.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசம் என்ற ஒன்று இருக்கின்றது இப் பிரதேசம் 28 குக் கிராமங்களையும், 20 கிராம சேவையாளர் பிரிவுகளையும், 7820குடும்பங்களையும்,26500 மக்களையும், தன்னகத்தே உள்ளடக்கியுள்ள ஒரு பெரிய மீழ்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசமாகும்.

இங்கு வாழ்கின்ற மக்கள் சிலாவத்துறையில் அமைந்துள்ள தரம் இரண்டைச் சேர்ந்த வைத்திய சாலைக்கே செல்ல வேண்டும் சுகாதார அமைச்சின் ஆளணி ஒதுக்கீட்டின் படி 3 நிரந்தர வைத்தியர்களும் 6 மருத்துவத்தாதிமார்களும் இருக்க வேண்டும் ஆனால் இருப்பதோ குறிப்பிட்ட நேரத்தில் வருகை தந்து பகுதி நேரமாக பணியாற்றும் தற்காலிக
வைத்தியர் ஒருவரும் ஒரு மருத்துவத் தாதியுமே சிகிச்சைக்காக வருகின்றநோயாளர்கள் சொல்லில் அடங்காத துன்பங்களை அனுபவிக்கின்றனர்இதற்கு இரண்டு வார காலப்பகுதிக்குள் சம்மந்தப்பட்ட அமைச்சரும் அதிகாரிகளும் நடவடிக்கைஎடுக்காவிட்டால் எனது தலைமையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என எனது மக்கள் சார்பாக மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related posts

Unlimited இணைய வசதிகள்! Package களுக்கு அனுமதி

wpengine

அமைச்சர் பௌசிக்கு வரப்போகும் ஆப்பு! அதாவுல்லா பாராளுமன்ற உறுப்பினர்

wpengine

மனைவியை கொலைசெய்து பொலிஸில் சரணடைந்த கணவன்.!

Maash