வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு குழு நியமனம்

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 60,000 பட்டதாரிகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.

மேலும் சில பட்டதாரிகள் மாகாண சபைகளில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளை உரிய முறையில் தகுதியான சேவைக்கு உள்வா தொடர்பில் புதிய குழுவினூடாக ஆராயப்பட்டுவருவதாகவும் அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares