பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்று இன்று தீ

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்று இன்று மதியம் தீப்பற்றியெரிந்ததில் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த வீட்டில் யாரும் அற்ற சமயத்தில் வீட்டின் கடவுள் பட அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீடு தீப்பற்றியெரிவதனை அவதானித்த அயலவர்கள் வீட்டின் முன் கதவினையுடைத்து தண்ணீர் ஊற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன் வீட்டினினுள் இருந்த குளிரூட்டி , சொகுசு கதிரைகள், உடைகள் என பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில எரிந்து நாசமாசியுள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர் மின்சாரத்தினை துண்டித்தமையுடன் அப்பகுதி கிராம சேவையாளரும் வருகை தந்து சேதங்களை பார்வையிட்டார்.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பிலான விசாரணைகளை பண்டாரிக்குளம் காவல் அரண் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

20க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக்குதிக்கத் தொடங்கியுள்ளனர்

wpengine

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்:

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி …..

Maash