பிரதான செய்திகள்

வேட்புமனு கோரல் 27ஆம் திகதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு கோரலுக்கான திகதி எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்கள் கோரப்பட்டு 14 நாட்களில் அவை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இம்மாதம் 27ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் என்றும், வேட்புமனுக்கள் பெறப்பட்ட பின்னர் தேர்தல் நாள் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் இலங்கை தேர்தல் ஆணையத்தின், மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29வது தலைவராக சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய..!

Maash

வீரியம் பெறும் கொரோனாவின் மரணம்! பலர் அச்சம்

wpengine

கல்விக்காக அதிக நேரம் செலவழித்த அரசியல்வாதி என்றால் நான் தான்

wpengine