வேட்பாளர்களும் பேஸ்புக் தொலைக்காடசிகளும்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் இம்முறை பேஸ்புக் தொலைக்காட்சிகளிலேயே தங்கள் பிரசாரங்களை அதிகம் முன்னெடுத்திருந்தனர்.

விசேடமாக, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தரப்பினரின் தேர்தல் பிரசாரங்கள் பேஸ்புக் நேரலையாகவே அதிகமாக காணப்பட்டன. இந்த விடயம அம்பாறை மாவட்டத்தில் கட்டுக்கடங்காத நிலைமை என்பதால் எதனைப் பார்ப்பது எதனை தவிர்ப்பது என்ற குழப்ப நிலையும் எனக்கும் பலருக்கும் ஏற்பட்டிருந்தது.

தேசிய தொலைக்காட்சிகளில் பங்கேற்க கொழும்பிலிருந்து அழைக்கப்பட்டும் அதனை நிராகரித்து உள்ளூர் பேஸ்புக் தொலைக்காட்சிகளிலேயே அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
இதன் காரணமாக நிறையவே பேஸ்புக் தொலைக்காட்சிகளும் உதயமாகின.
இவ்வாறு தேர்தல் காலத்தில் மட்டுமே முளைத்த பேஸ்புக் தொலைக்காட்சிகளின் எதிர்காலம் கவலைக்குரியனவாகவும் அமையலாம்.

எது எப்படியிருப்பினும் வேட்பாளர்களின் வேட்கையாக, வேட்டையாக இருந்த, இந்த பேஸ்புக் தொலைக்காட்சிகளை இவர்கள் எதிர்காலத்தில் மறந்து விடுவார்களோ தெரியாது.

தேர்தலில் வெற்றி பெறுபவர்கள், அமைச்சுப் பதவிகளைப் பெறுபவர்கள் தங்களுக்கான தேர்தல் களமாகத் திகழ்ந்த பேஸ்புக் தொலைக்காட்சிகளை முற்றாக மறந்து விட்டு மீண்டும் கொழும்பில் தேசிய தொலைக்காட்சிகளில் முகத்தைக் காட்ட அக்கறை கொள்ளலாம்.

அவ்வாறு முற்றாக மறந்து செயற்பட்டால் அது நன்றி மறந்த செயலாகவே அமையும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares