செய்திகள்பிரதான செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டை இலந்த மோடார்சைக்கிள், காத்தான்குடி 17 வயது சிறுவன் பலி..!

இன்று அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் (17) என்ற சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த சிறுவன் செலுத்திச் சென்ற மோடார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் முன்னெடுக்கின்றனர்.

Related posts

முன்னால் அமைச்சர் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல்

wpengine

மாசற்ற அரசியல் செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்

wpengine

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள்! ஜனாதிபதி ஆணைக்குழு

wpengine