பிரதான செய்திகள்

வெள்ளம்பிடிய இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளி மீது முகமூடி அணிந்தவர்கள் தாக்குதல் (படம்)

கொஹிலவத்தை இப்றாஹிமிய்யா ஜும்மா பள்ளிவாயல் மீது நேற்றிரவு 01.00 மணிக்கு இனவாதிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரவு 01.00 மணியளவில் வேன் ஒன்றில் வந்த சுமார் 7 அல்லது 8 பேர் கொண்ட கும்பல் ஒன்றே இந்த மேற்படி தாக்குதலை நிகழ்த்தி உள்ளது. என அறியமுடிகின்றது.

தாக்க வந்தவர்கள் பள்ளியின் முன்னால் இருந்த பெரிய கேட்டின் மீதேறி உள்ளே நுழைந்து கேட்டை உடைத்துள்ளதுடன், பள்ளியின் கண்ணாடிகள், கதவு, ஜன்னல் போன்றவற்றை கற்களால் அடித்து சேதப்படுத்தியுள்ளர்.

பெயிண்ட் வேலைக்காக பள்ளியில் தங்கியிருந்தவர்கள் எழும்பியவுடன் வந்திருந்த கும்பல் ஓடியுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள்.

தாக்குதல் நடத்தியவர்கள் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்திருந்ததாகவும், தாம் தாக்குதல் நடத்தும் போது, தாமே அதனை வீடியோவும் செய்துள்ளார்கள் என்றும் அதனை பார்த்தவர்கள்

தெரிவிக்கிறார்கள்.பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரனைகளையும் நடத்தி வருகிறார்கள்.

Related posts

வடக்குடன் ,கிழக்கை இணைக்க வேண்டிய எந்த தேவையுமில்லை.-ரிஷாத்

wpengine

நஷீர் அஹமட் தடை நீக்கம்

wpengine

MERCY தொழிற் பயிற்சிக்காக பயிலுனர்களை சேரத்தல் -2016

wpengine