பிரதான செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட க.பொ.த உ/த பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக பாடக்குறிப்புகள்

(கரீம் ஏ.மிஸ்காத்)

நாடாளாவிய ரீதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இம் முறை க.பொ.த உ/த பரீட்சை எழுதவிருந்து தமது பாடக்குறிப்புக்களை இழந்து நிர்க்கதியான மாணவர்களுக்கு றிஸாலா அமைப்பானது, அவர்களுக்கான பாடக்குறிப்புக்களை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காக கடந்த ஒரு கிழமையாக முயற்சித்து முதற்கட்ட பணியாக  நேற்று (28.05.2016) வணிகப்பிரிவிற்கான மாணவர்களுக்கு குறிப்புகள் தபால் செய்யப்பட்டது.

இலங்கையின் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு இது தொடர்பாக எமது அறிவிப்பினை விடுத்திருந்ததன் பிற்பாடு சுமார் 200 க்கும் மேற்பட்ட அழைப்புகள் மூலம் எம்மை தொடர்பு கொண்டு உதவிகளை வேண்டினர்.

அதன் பின்னர் விரைவாக எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரம் நிந்தவூரில் இம்முறை பரீட்சை எழுதவிருந்த மாணவர்களிடம் குறிப்புகளை எடுத்து சில தணவான்களின் நன்கொடையுடன் முதற்கட்டமாக வணிகப்பிரிவிற்கான பாடக்குறிப்புகளை போட்டோ பிரதி செய்து நேற்று 10 பேருக்கான பாடக்குறிப்புக்கள் அல்லாஹ்வின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டது.685864b0-eba8-44e1-8ecd-42fa4a9533ef

மேலும் மீதம் பேருக்கான குறிப்புக்கள் அனுப்பப்பட உள்ளது இன்ஷா அல்லாஹ்.
றிஸாலாவின் அடுத்த கட்ட பணிகள் தொடரும். என தெரிவித்துள்ளனர்.98cb1d85-1f4a-42ae-9786-c1755da56678

Related posts

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் இனவாதிகள்! இனவாதத்துடன் உருவான கட்சி

wpengine

பட்டதாரிகளுக்கு சந்தர்ப்பம்

wpengine

அமைச்சர் ஹக்கீமின் தாய் மரணம்

wpengine